வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2024 (18:39 IST)

மின் கசிவால் தீப்பிடித்து எரிந்த கிரேன்..! போராடி தீயை அணைத்த வீரர்கள்..!!

crane fire
ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச் சாலையில் சென்று  கொண்டிருந்த கிரேன் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. 
 
தூத்துக்குடி  புதிய துறைமுகம் பகுதியில் இருந்து எப்போதும் வென்றான் பகுதியில் உள்ள யார்டு ஒன்றுக்கு கிரேன் ஒன்று ஓட்டப்பிடாரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. 
 
அப்போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கிரேன் தீப்பற்றி எரிந்தது. கிரேன் முழுவதும் தீ கொழுந்து விட்டு எறிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.
 
தீ விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதை  அடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார்  முக்கால் மணி நேரமாக  போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

 
தீ விபத்து காரணமாக தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.