வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 7 மே 2020 (16:34 IST)

திமுக தான் மதுவிற்பனைக்கு மூல காரணம் – அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சென்னை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மது விற்பனை தொடங்குவதற்கு எதிராக திமுக அறிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி தமிழ்காத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கருப்பு சின்னம் அணிய வேண்டும். 5 பேருக்கு மிகாமல் 15 நிமிடங்களுக்கு தங்களது வீடுகளுக்கு வெளியே மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 

அதன்படி இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் தனது வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து வந்து நின்றார். அவரோடு இளைஞட் அணி செய்ளாலர் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் மனைவி துர்கா ஆகியோரும் வந்து நின்றனர். 

சென்னை அயனாவரத்தில்  கொரோனா தடுப்புப் பணிகள்  குறித்து ஆய்வு மேற்கொண்ட மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து   கூறியதாவது :

அதிமுக மக்கள் நலனைக் கொண்டு செயல்பட்டு வருகின்ற நிலையில்,  மக்களை திசை திருப்ப திமுக முயற்சி செய்கிறது என குற்றம்சாட்டினார்.

மேலும்,  திமுகதான் மதுவிற்பனைக்குக் காரணம் என என தெரிவித்தார்.