பலத்த கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

chennai rain
Last Modified வியாழன், 22 நவம்பர் 2018 (12:32 IST)
திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  மழை எச்சரிக்கையால் விடுமுறை விடப்பட்டுள்ளது. 
மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அதிகமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே மழை சோவென கொட்டித்தீர்த்தது.
 
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலான கனமழை பெய்யக்கூடும் என வானிலை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :