தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை; சென்னை வானிலை ஆய்வு
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்ததை தொடர்ந்து வடதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மதம் அவ்வப்போது பெய்து வந்த மழை தற்போது பெய்யவில்லை. வெயிலின் தாக்கமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது. வெப்பசலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதேபோன்று தற்போது வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாட்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வடபகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் வடப்பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, ஆந்திரா கடலோர மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பல பகுதிகளில் மிதமான மழையும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.