வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 24 ஜூன் 2020 (17:42 IST)

ஏழைத் தாயின் போராட்டம் நம்மைப் பதற வைக்கிறது – உதயநிதி டுவீட்

தள்ளுவண்டிக் கடை நடத்தி வந்த ஒரு பெண், ஊரடங்கை காரணம் காட்டி போலீஸார் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். அதைத் தட்டிக் கேட்ட மகனை போலீஸார் ஜீப்பில் ஏற்றியதாகச் செய்திகள் வெளியான நிலையில்,. இதுகுறித்து திமுக  இளைஞரணி செயலாளர் உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

தள்ளுவண்டி கடை நடத்தும் தன் தாயை ஊரடங்கை காரணம் காட்டி தரக்குறைவாக பேசும் போலீஸ் எஸ்.ஐ-யை மகன் தட்டி கேட்கிறான். அதற்கு அவனை அடித்து ஜீப்பில் ஏற்றுகின்றனர். அப்போது போலீசின் கோரப்பிடியிலிருந்து தன் மகனை காக்கக் கண்ணீருடன் கதறும் இந்த ஏழைத் தாயின் போராட்டம் நம்மைப் பதற வைக்கிறது என தெரிவித்துள்ளார்.