வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கன்னியாகுமரி , திங்கள், 10 ஜூன் 2024 (10:56 IST)

சோதனை சாவடியில் கூட்டணியாக மூன்று காவலர்கள் லஞ்சம்!

குமரி மாவட்டத்தின் தலைவாயிலான ஆரல்வாய்மொழியில்  காவல் நிலையத்திற்கு எதிரில் , காவல்துறையின் சோதனைச்சாவடி உள்ளது. 
 
ஒரே நேரத்தில் மூன்று காவல்துறையினர் பணியில் இருப்பார்கள்.
 
ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை தினம் அதிக எண்ணிக்கையில் கடந்து செல்வது கனிமவளங்களை கேரளாவுக்கு கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் தான். 
 
இதில் உரிய அனுமதி சீட்டுடன் கடந்து செல்லும் வாகனங்களை விட உரிமம் இல்லாமல் செல்லும் கனிமம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் தான் அதிகம்.
 
சோதனை சாவடியில் பணியில் இருக்கும் காவலர்கள் கடந்து செல்லும் வாகனங்களை சோதனை இடுவதை விட  சட்டவிரோத கனிம லாரிகளின் ஓட்டுநர்களிடம் இருந்து கை ஊட்டு பெறுவதுதான் அவர்களின் தினப்பணியாக இருப்பதாக ஆரல்வாய்மொழி பகுதியில் வசிக்கும் மக்களின் புகாராக இருந்தாலும்.
 
கனிமவள கனரக வாகனங்களிலும்  வசூல் வேட்டையை சோதனை சாவடியில் இருக்கும் காவலர்கள்  வாங்கிய பணத்தை புத்தகங்கள் இடையே மறைத்து வைப்பதை கவனித்து கை பேசியில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வயிரலாக செய்துள்ளனர்.