1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (17:53 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க... 'ஜெயிலர்' பட ரிலீஸுக்காக விடுமுறை அறிவித்த நிறுவனம்

jailer
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர், ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார்,  ஜாக்கிஷெராப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சிறப்பாக  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

நாளுக்கு நாள் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ரஜினியுடன், மோகன் அமர்ந்திருப்பது போன்ற  புதிய போஸ்டரை ஜெயிலர் படக்குழு வெளியிட்ட நாளில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஜெயிலர் படத்தின் 4 வது சிங்கிலான  ரத்தமாரே என்ற பாடலை  சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில்,  ரஜினியின் ஜெயிலர் படத்தை முதல்நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டி ரசிகர்கள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும்  ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்திற்கு மேல் டிக்கெட்டுகள் ''புக் மை ஷோ''வில் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த  நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மாவட்டத்தில் இயங்கி வரும் ‘’ஆல்புரோ டிரெயினிங் நிறுவனம்’’  வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ரிலீஸை முன்னிட்டு  ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

அதில், 
 
''உற்சாகமான செய்தி ! ஆகஸ்ட் 10 , 2023 அன்று , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எதிர்பார்க்கப்பட்ட " ஜெயிலர் " படம் வெளியாவதைக் கொண்டாடும் வகையில் , எங்கள் ஊழியர்கள்  அனைவருக்கும்  சிறப்பு  விடுமுறை என்பதை  அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் .  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க !!!'' என்று தெரிவித்துள்ளது. 

அந்த நிறுவனத்தின் அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.