ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜூன் 2024 (10:40 IST)

பரந்தூர் விமான நிலையத்திற்கு மேலும் 67 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு: தமிழக அரசு அறிவிப்பு..!

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மேலும் 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த முதல் நிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த முதல் நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை வெளியிட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் இந்த நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த நிலம் குறித்த பாத்தியதை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் நிலம் கையகப்படுத்துவதற்கு ஆட்சேபனைகள் ஏதும் தெரிவிக்கப்பட்டால் அந்த ஆட்சேபனைகள் மீதான விசாரணை ஜூலை மாதம் 22 மற்றும் 23ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அறிவித்துள்ளது.
 
ஏற்கனவே பரந்தூர் விமான நிலையம் அமைக்க அந்த பகுதி மக்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது அதே பகுதியில் மேலும் 67 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது அந்த பகுதி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran