புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 22 ஏப்ரல் 2020 (19:27 IST)

Face Book -ல் லைக், ஷேர் பெற வீடியோ எடுத்த நபர்… கன்னத்தில் அறைத்த பெண் எஸ்.ஐ!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த  பெண் எஸ்.ஐ ஒருவரை  ஒருவர் வீடொயோ எடுத்துள்ளார்.

தமிழகம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் போலீஸ் அவுட் போஸ்ட்டில் உதவி ஆய்வாளார், வாகனங்களில் மாஸ்க் அணியாமல் வரும் வாகனஓட்டிகள் மற்றும் நபர்களிடம் ரூ.100 அபராதம் விதித்தார்.

அப்போது, மாஸ்க் அணியாமல் இருந்த வாகனத்தில் வந்த ஒரு நபர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி,  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது , உதவி ஆய்வாளர் அவரிடம் இதுகுறித்து தெளியாக விளக்கிக் கூறி, ரூ.100 அபராதம் கட்டும்படி கூறியுள்ளார்.

அதனை அங்கிருந்த ஒரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த உதவி ஆய்வாளர், இதை போட்டோ எடுப்பியா என கேட்டு அவரை ஓங்கி அரைவதும்,  அதை தான் ஃபேஸ்புக்கில் பதிவிடுவதாகக் கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.