திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (19:13 IST)

உலக அளவில் கொரொனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது ! 5 லட்சம் பேர் நலம் பெற்றனர் !

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை சமாளிக்க உலக நாடுகள் பலவும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், உலக அளவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,00,322 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 147757 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 558150 பேர் குணமடைந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் கொரோனா தொற்றால்  உயிரிழந்துள்ளனர். அங்கு  கொரோனாவால் பலியானோர்  எண்ணிக்கை 19,500 ஆக அதிகரித்தது.

பிரிட்டனில் இன்று  ஒரேநாளில் மேலும் 847 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். அங்கு  கொரோனாவால் பலியானோர்  எண்ணிக்கை 14,576ஆக அதிகரித்துள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.