கொரோனாவில் இருந்து மீண்ட இங்கிலாந்து இளவரசர் ! வீடியோ வெளிட்டு நன்றி !

Last Modified வியாழன், 2 ஏப்ரல் 2020 (09:52 IST)

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து இளவரசர் அதில் இருந்து முழுவதும் குணமாகியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 8 லட்சம் பேருக்கு மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 47,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு 200 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 1834 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலகளவில் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

இந்நிலையில் இளவரசர் சார்லஸுக்கு தற்போது கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் தொற்று சோதனைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரும் அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தனிமைப் படுத்தப்பட்டனர். ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் இப்போது முழுவதுமாக குணமாகியுள்ளார்.

இதை அவர் தனது சமுகவலைதளப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகளில் வைரஸ் இல்லை என்றாலும் இன்னும் சிறிது காலம் அவர் தனிமைப்படுத்திக் கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :