செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (10:53 IST)

ஆந்திராவிலிருந்து ரயிலில் வந்த ஆசாமி.. சூட்கேஸில் பெண்ணின் பிணம்! - திருவள்ளூரில் அதிர்ச்சி!

ஆந்திராவிலிருந்து சூட்கேஸில் பிணத்தை கொண்டு வந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை வந்த புறநகர் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவருடன் அவரது மகளும் பயணித்துள்ளார். இருவரும் சென்னை மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். அவர்களுடன் ஒரு சூட்கேஸும் இருந்துள்ளது. அந்த சூட்கேஸை ப்ளாட்பாரத்தில் வைத்த அவர்கள் ஒன்றும் தெரியாதது போல அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

 

ஆனால் அவர்களது நடவடிக்கைகளை கவனித்த போலீஸார் சந்தேகமடைந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். அவர்கள் கொண்டு வந்து ரயில் நிலையத்தில் விட்டு சென்ற சூட்கேஸை போலீஸார் பரிசோதித்தபோது அதில் ஒரு 60 வயது பெண்ணின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

 

இதுகுறித்து அந்த ஆசாமியிடம் விசாரணை நடத்தியதில், அந்த 60 வயது பெண் தனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபட சொல்லி வற்புறுத்தி வந்ததாகவும், அதனால் அவரை கொன்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் பிணத்தை அப்புறப்படுத்தினால் ஆந்திராவில் சிக்கிக் கொள்வோம் என்று தமிழக எல்லைக்குள் போட்டுவிட்டால் மாட்ட மாட்டோம் என சூட்கேஸில் வைத்து கொண்டு வந்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K