ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:38 IST)

தி.மு.க. பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு.. திருவள்ளூரில் பரபரப்பு..!

Bomb
திருவள்ளூரில் திமுக பிரமுகர் வீட்டில் திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிஷா பிரியதர்ஷினி என்பவரின் கணவர் ஜெகன் திமுக பிரமுகராக உள்ளார். இவரது வீட்டில் நேற்று வெடிகுண்டு வீசப்பட்டதாகவும் வெடிகுண்டு வீசிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த வெடிகுண்டு வீட்டின் கேட் அருகே விழுந்ததால் யாருக்கும் எந்த சேதமும் இல்லை என்றும் ஜன்னல் கண்ணாடி மட்டும் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதே கும்பல் அதே பகுதியில் உள்ள சரண்ராஜ் என்பவரின் காரையும் சேதப்படுத்தி விட்டு சென்றதாகவும் அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran