சென்னை - திருவள்ளூர் ரயில் பயணம் இனி 10 நிமிடங்கள் அதிகமாகும்: என்ன காரணம்?
சென்னை-திருவள்ளூர் இடையிலான மின்சார ரயில் பயணம் 10 நிமிடங்கள் அதிகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், ஆவடி-அம்பத்தூர் இடையே மெட்ரோ குடிநீர் வாரியத்தின் குழாய் பொருத்தும் பணிகள் நடைபெறுவதால், இந்த பகுதியில் 6 கி.மீ. தொலைவில், ரயில்கள் 20 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது, இந்த பகுதியில் ரயில்கள் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்ற நிலையில், இனி 20 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்லும் என்பதால், பயண நேரம் 10 நிமிடங்கள் அதிகரிக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது, இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மெட்ரோ குடிநீர் வாரிய பணிகள் முடிவடையும் வரை, இந்த பகுதியில் ரயில்களின் வேகத்தை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
Edited by Mahendran