ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (13:04 IST)

நாளை ஆடி கிருத்திகை.. ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை..!

நாளை ஆடி கிருத்திகை கொண்டாடப்படுவதை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் கிருத்திகை வந்தாலும் ஆடி கிருத்திகை என்பது முருகனுக்கு மிகவும் விசேஷமான கிருத்திகை என்பதும் குறிப்பாக திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை அன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபடுவார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நாளை ஆடி கிருத்திகை திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’ஆடி கிருத்திகையை ஒட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் ஜூலை 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்களில் சில பணியாளர்கள் மட்டும் செயல்படுவார்கள். வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ப

Edited by Siva