1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Erode east MLA thirumagan sudden death

ஈரோடு கிழக்கு எம் எல் ஏ திருமகன் ஈ வெ ரா மாரடைப்பால் மரணம்!

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் பிரமுகர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ வெ ரா சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

சில தினங்களாக அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இவரின் திடீர் மறைவு காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பத்திரிகையாளர்களை கதற வைத்த அண்ணாமலை: இனி யூடியூப் சேனல்களுக்கு அனுமதி இல்லை!