1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 மே 2022 (19:39 IST)

மகள் உயிரிழந்த ஒரே ஆண்டில் பெண் காவலர் மாரடைப்பால் மரணம்:குடும்பத்தினர் சோகம்

மகள் உயிரிழந்த ஒரே ஆண்டில் பெண் காவலர் மாரடைப்பால் மரணம்:குடும்பத்தினர் சோகம்
மதுரையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமித்ரா என்ற பெண் தலைமைக் ஆய்வாளர் மாரடைப்பில் காலமானார். இவரது மகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அதுமுதலே மனநிலை பாதிப்பில் இருந்ததாக கூறப்படுவது
 
இந்த நிலையில் சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சுமித்ராவுக்கு  நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனா அவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
 
அடுத்தடுத்த ஆண்டுகளில் தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது