1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The OPS Dilemma: Only Two Paths Left for the Veteran Leader?

ஓபிஎஸ்-க்கு இரண்டே வழிகள் தான்.. ஒன்று திமுகவில் சேருவது.. இரண்டு அரசியல் ரிட்டயர்டு ஆவது..!

OPS Political Future
தமிழக அரசியலில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாகவும், முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் தற்போது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தனது பலத்தை நிரூபிக்க அவர் மேற்கொண்ட சட்டப் போராட்டங்களும், அரசியல் நகர்வுகளும் அவருக்குப் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. தற்போதைய சூழலில், அவருக்கு முன்னால் இரண்டே இரண்டு வழிகள் தான் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
முதலாவது வழி, ஆளும் கட்சியான திமுகவில் இணைவது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கதவுகள் அவருக்கு முழுமையாக அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்க இது ஒரு வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. இரண்டாவது வழி, அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவது. நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட ஒரு தலைவர், செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் கௌரவமான ஓய்வை அறிவிப்பது அவரது கடந்த காலப் பெருமையைக் காக்கும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
 
குறிப்பாக, அமித்ஷாவின் புதிய கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் முன்னிலைப்படுத்தப்படுவதால், ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டதாகவே கருதப்படுகிறது. அவரது ஆதரவாளர்கள் பலரும் மாற்று முகாம்களுக்குத் தாவி வரும் நிலையில், அவர் எடுக்கப்போகும் அந்த 'இறுதி முடிவு' என்னவாக இருக்கும் என்பதே இப்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.
 
Edited by Siva
About Writer
Siva