வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 20 மே 2018 (14:31 IST)

'தல' என்றால் அது ஒரே ஒருவர்தான்: பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

தல என்ற வார்த்தை முதலில் அஜித்துக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'தீனா' படத்தில் இருந்து அஜித்தை அவரது ரசிகர்கள் தல என்றே அழைத்து வந்தனர்.
 
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர் தோனியையும் தல என்றே கிரிக்கெட் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இதனால் தோனி ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்களும் ஏற்படுவதுண்டு.
 
இந்த நிலையில் தல என்றால் அது ஒரே ஒருவர் தான். அவர் தான் அஜித் அண்ணா என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:  தல என்பது யார் என்று எல்லோருக்கும் தெரியும். அது அஜித் அண்ணா மட்டுமே. தோனியை தல என்று ஒருசிலர் கூறுகிறார்கள். தோனி மிகச்சிறந்த வீரர், நல்ல கேப்டன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் தல என்று வரும் போது அது அஜித் அண்ணா மட்டும் தான்.” என கூறியுள்ளார்.
 
ஸ்ரீசாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டவர். அதன் பின்னர் ஒருசில திரைப்படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சினிமா, கிரிக்கெட் இரண்டிலும் இல்லாமல் இருக்கும் ஸ்ரீசாந்த், பிரபலமாக வேண்டும் என்பதற்காக அஜித் குறித்து பேசியுள்ளதாக சமூக வலைத்தள பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.