தூத்துக்குடி ஏடிஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: அடுத்த அதிரடி

தூத்துக்குடி ஏடிஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
Last Updated: செவ்வாய், 30 ஜூன் 2020 (07:30 IST)
தூத்துக்குடி ஏடிஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மர்ம மரணம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நீதிபதியை தரக்குறைவாக பேசிய காவலர் மகாராஜன் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையை தென்மண்டல ஐஜி எடுத்து உள்ளார் என்ற தகவல் தற்போது வலம் வந்து கொண்டிருக்கின்றன
மேலும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகியோர் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவில் தூத்துக்குடி மாவட்ட டிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகியோர்களை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது தெரிந்ததே
அதன் அடிப்படையில்தான் இன்று அதிரடியாக காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சாத்தான்குளம் வியாபாரிகளின் மர்ம மரணம் குறித்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :