கைகோர்த்ததற்கு நன்றி: சூர்யாவுக்கு சேரனின் பதிவு!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 29 ஜூன் 2020 (17:42 IST)
சூர்யாவின் அறிக்கையை பதிவிட்டு இயக்குனர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். 
 
சாத்தான்குளம் தந்தை-மகன் மர்ம மரணத்திற்கு கோலிவுட் திரையுலகின் பலர் கண்டனம் தெரிவித்தபோதிலும், மாஸ் நடிகர்கள் யாரும் கருத்து சொல்லவில்லை என்ற நிலையில் தற்போது சூர்யா இதுகுறித்து அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 
 
சூர்யாவின் இந்த அறிக்கையை குறிப்பிட்டு இயக்குநர் சேரன், சூர்யா கைகோர்த்ததற்கு நன்றி. அருமையான கடிதம். அஹிம்சை முறையில் எடுத்துச்சொல்வோம். அரசிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை விண்ணப்பமாக முன்வைப்போம். அனைவரின் தேவை இதுவென அறியும்போது அரசும் தன்னை மாற்றிக்கொள்ளும் நம்புவோம் என பதிவிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :