ஒரே நாளில் ரூ.1,160 விலை குறைந்த தங்கம்..! – மகிழ்ச்சியில் மக்கள்!
கடந்த சில வாரங்களாக அதிரடியாக விலை உயர்ந்து வந்த தங்கம் ஒரே நாளில் ரூ.1000க்கும் அதிகமாக விலை குறைந்துள்ளது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கியதாலும், சில போர் காரணங்களாலும் கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த 19ம் தேதி வரலாற்று உச்ச்சமாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது.
நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760க்கு தங்கம் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.1,160 குறைந்து சவரன் தங்கம் ரூ.53,600க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ145 குறைந்து தற்போது ரூ.6,700க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக குறைந்து வருவது பொதுமக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K