1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. meteorological warning about heat in summer

அடுத்த 4 நாட்களுக்கு வெயில் உச்சத்தை அடையும்.. 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்குமா?

Summer
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெயில் உச்சத்தை அடையும் என்றும் மூன்று டிகிரி வரை இயல்பு விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்னும் இனி வரும் நாட்களில் வெயில் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து உச்சநிலை அடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெயில் காரணமாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள் பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மற்றவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத இறுதியிலேயே வெயில் கொளுத்தி வரும் நிலையில் மே மாதம் அக்னி நட்சத்திரம் காலத்தில் உச்சபட்சமாக வெப்பம் பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இன்ஸ்டாகிராம் இளைஞரோடு காதல்.. குழந்தைகளை அனாதையாக விட்டு ஓடிய தாய்!