செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (11:35 IST)

பணியாளர்களுக்கு கார் பரிசு! ஆச்சர்யப்படுத்திய ஐடி நிறுவனம்!

Car
சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் தனது பணியாளர்களுக்கு காரை பரிசாக அளித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நிறுவனங்கள் பல்வேறு பரிசுகள் அல்லது ஊக்கத்தொகை போன்றவற்றை வழங்குவது வழக்கம்.

அவ்வாறாக சென்னையில் உள்ள ஐடியாஸ் 2 ஐடி நிறுவனம் தனது பணியாளர்களுக்கு காரையே பரிசாக அளித்துள்ளது. இந்த நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 100 பணியாளர்களுக்கு 100 மாருதி சுசுகி கார்களை பரிசளித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பெரும் வைரலாகியுள்ளது.