வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (16:26 IST)

செயல்படாத மருத்துவமனை, கண்டுக்கொள்ளாத பேரூராட்சி! – அதிமுக ஆர்ப்பாட்டம்!

ADMK
செயல்படாத அரசு மருத்துவமனையை கண்டித்தும் ,மக்களுக்கு பணியாற்றாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாலாஜாபாத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்


 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் திமுக வசம் உள்ளது.  இந்த பேரூராட்சி வாயிலாக மக்களுக்கு எந்த வித பலனும் கிடைப்பதில்லை, பலமுறை மனு அளித்து நடவடிக்கை இல்லை எனவும் , வாலாஜாபாத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருந்துகள், நவீன உபகரணங்கள் இல்லை எனவும் இதனால் விபத்து உள்ளிட்ட அவசர கால சிகிச்சைக்காக வருபவர்கள் மேல் சிகிச்சை என செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்

போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் மக்களுக்கு உரிய  மருத்துவ வசதி கிடைக்காமல் உள்ளது. எனவே மேற்கண்ட  காரணங்களுக்காக காஞ்சிபுரம் மேற்கு அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் முன்னிலையில், கழக அமைப்புச் செயலாளரான வாலாஜாபாத் கணேசன் ஆகியோர்தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கண்ட காரணங்களை சுட்டிக்காட்டி கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம்,, வஞ்சிக்காதே வஞ்சிக்காதே,,, செயல்படுத்து  செயல்படுத்து போன்ற கோஷங்களை அதிமுகவினர் எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.