1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (16:58 IST)

விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய ஜெயக்குமார்

jayakkumar
சென்னை புழல் அருகே விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை புழல் அருகே இன்று விபத்தில் சிக்கித் தவித்த மூதாட்டி ஒருவரை மக்கள் யாரும் கண்டுகொள்ளாமல் சென்றனர்.

அப்போது அந்த வழியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விபத்தில் சிக்கிய மூதாட்டியின் கால்களைப் பிடித்துத் தூக்கி, ஆட்டோவில் ஏற்றி, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், ஆட்டோவில் மூதாட்டி செல்வதற்கான  பணத்தையும் கொடுத்து, அவரை அனுப்பி வைத்தார்.

''நாளை நமக்கும் இதே நிலைதான் இருப்போம் சற்று ஈரத்துடன்…மருத்துவ உதவியே மகத்தான உதவி'' என்று  ஜெயக்குமார் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.