1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth.K
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (10:46 IST)

கள்ளநோட்டுகளை கைமாற்றிய முன்னாள் ராணுவ வீரர் கைது! – சென்னையில் பரபரப்பு!

crime
சென்னையில் கள்ள ரூபாய் நோட்டுகளை கைமாற்ற முயன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியாவில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளையும் கூட கள்ளநோட்டு கும்பல் இம்மி பிசகாமல் அச்சடித்து புழக்கத்தில் விடுவதும், அதுதொடர்பான கைது நடவடிக்கைகளும் அடிக்கடி நடந்து வருகின்றன.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாலையோர கடையொன்றில் சமீபத்தில் ஒருவர் ரூபாய் நோட்டை மாற்ற முயன்றுள்ளார். ஆனால் அது கள்ளநோட்டாக இருந்துள்ளது. இதுதொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் கள்ளநோட்டை கைமாற்ற முயன்றவர் முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை என தெரிய வந்துள்ளது. அவருடன் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட வழக்கறிஞர் சுப்பிரமனியன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்து ரூ.45 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ரூபாய் நோட்டுகளை அச்சடித்து கொடுத்த குமார் என்ற நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Edit by Prasanth.K