வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (17:28 IST)

சாக்கடையில் வீசப்பட்ட ஐந்து மாச குழந்தை...கோவையில் பரபரப்பு

கோவை மாவட்டம்  ராமநாதபுரத்தில் உள்ள  கோயில் மைதானப் பகுதியில்  இன்று சாக்கடை நீரில் காலை நேரத்தில் ஒரு குழந்தை கிடந்துள்ளது.
தாயின் ஸ்பரிசத்தில் இருக்க வேண்டிய குழந்தையை சாக்கடையில் பார்த்ததும் பொதுமக்கள் திகைப்படைந்தனர்.
 
இதனைதொடர்ந்து மக்கள் உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அங்கு விரைந்து வந்து சாக்கடையில் இருந்த குழந்தையை மீட்ட காவல்துறையினர் அக்குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
குழந்தை நீண்ட நேரம் சாக்கடை நீரில் மிதந்ததால்  மருத்துவர்களின் சிகிச்சைக்கு பலன் அளிக்காமல் அக்குழந்தை இறந்து போனது மக்கள் பலருக்கும் கண்ணீரை வரவழைத்தது.
 
சக்கடைக்குள் குழ்ந்தை கிடந்த சம்பவம் ராமநாதபுர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.