புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (17:13 IST)

தமிழிசையை நீக்கினால் பாஜக வளர்ச்சி அடையும்: பிரபல நடிகை

அரசியல் கட்சி என்றாலே அதில் கோஷ்டியும் இருக்கும் என்பது வழக்கமான ஒன்றே. சிறிய கட்சிகளில் கூட கோஷ்டி இருப்பதும், கோஷ்டி மோதல் நடைபெறுவதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது பாஜகவில் தமிழிசை மற்றும் காயத்ரி ரகுராம் கோஷ்டியினர் கடந்த சில நாட்களாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் போதையில் கார் ஓட்டியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'காயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை, கட்சியிலேயே அவர் இல்லாதபோது நான் எதற்கு அவரைப்பற்றி கருத்து சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு காயத்ரி ரகுராமும் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த காயத்ரி ரகுராம், 'தமிழிசை சவுந்தரராஜனை தமிழக பாஜக தலைவர் பதவிலிருந்து நீக்கினால் பாஜக வளர்ச்சி பெறும் என்று கூறியுள்ளார். இந்த கருத்து தமிழிசை ஆதரவாளர்களை ஆத்திரம் அடைய செய்துள்ளது