செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 டிசம்பர் 2018 (16:20 IST)

பெண்களை உல்லாசத்திற்கு அழைக்கும் குடிகாரன்: நள்ளிரவில் அராஜகம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கல்லாமேடு என்ற கிராமத்தின் கோட்டை பளுவஞ்சி பகுதியில் குடிகாரன் ஒருவன் நள்ளிரவில் வீட்டு கதவை தட்டி பெண்களை உல்லாசத்திற்கு அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதாவது, அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் நள்ளிரவு நேரத்தில் அரை நிர்வாணமாக ஒவ்வொரு வீடாக சென்று வீட்டின் கதவைதட்டி பெண்களை உடல் உறவுக்கு அழைத்துள்ளார். 
 
இதனால், இந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாருக்கு போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. 
 
எனவே, வேறு வழியின்றி அந்த பகுதி மக்கள் இரண்டு அரசு பேருந்துகளை சிறைபிடித்து, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
பின்னர் போலீஸார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய உறுதி அளித்த பின்னர் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.