பிரபல ரவுடிகள் முகம் சிதைத்துக் கொலை ! சென்னையில் பரபரப்பு...

Last Updated: திங்கள், 3 டிசம்பர் 2018 (17:03 IST)
நம் மாநில  தலைநகர் சென்னையில் அதிக ரவுடிகள் இருப்பதாக செய்திகள் வெளியாகின.  இதனால் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சில மாதங்களுக்கு முன் சிறையில் அடைத்தனர். இதனால் ஓரளவு  சென்னை வாசிகள் நிம்மதியாக இருந்தனர்.
இந்நிலையில் வண்டலூர் பகுதியில் நேற்று கொடூரமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீதர் என்ற ரவுடியின் உடலை போலீஸார் மீட்டனர்.
 
வண்டலூர் போலீஸாருக்கு இன்று காலையில் ஊரப்பாக்கம் பகுதியில் இருந்து போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் சலையோரத்தில் ரத்தவெள்ளத்தில் ஒருவர் காரில் முகம் சிதைவுற்ற நிலையில் இறந்துகிடக்கிறார் என தகவல் கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின் போலீஸார் அக்கம் பக்கத்தில் விசாரித்த போதுதான் உண்மை தெரிந்தது, கொல்லப்பட்டது ரவுடி ஸ்ரீதர் என்று.
 
முன்னாள் அதிமுக ஊராட்சி தலைவர் வழக்கில் ஸ்ரீதருக்கு தொடர்பு இருந்ததால் போலீஸாரால் கைது செய்யப்பட்டவர் சில நாட்கள் முன்புதான் வெளியே வந்தார்.
 
இந்நிலையில் ஜாமீனில் வந்தவர் ஊரில் தகராறில் ஈடுபட்டுள்ளார் என தெரிகிறது. இதனால் ஸ்ரீதர் மற்றும் உடன் இருந்த இன்னொரு ரவுடியை  பழிவாங்கும் நோக்கில் அல்லது முன்  விரோதத்தில் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
ரவுடி ஸ்ரீதர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் வண்டலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :