ஒன்றிணைந்து இந்தியாவை உருவாக்குவோம் - மோடி ட்விட்டரில் செய்தி

modi
Last Updated: வியாழன், 23 மே 2019 (15:48 IST)
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு பெற்று இருக்கிறது. இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பல தலைவர்களிடம் இருந்தும் தலைவர்கள் பலர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். 
தற்போது ட்விட்டரில் மக்களுக்கு நன்றி தெரிவித்த மோடி “நாம் ஒன்றிணைந்து வளர்வோம், நாம் ஒன்றிணைந்து செழிப்படைவோம், நாம் ஒன்றிணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம், இந்தியா மீண்டும் வென்றது” என்று தெரிவித்துள்ளார்.
 
இன்று மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தொண்டர்களை சந்திக்க உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :