நீலகிரியில் ஆ ராசா வெற்றி – உற்சாகத்தில் திமுக !

Last Modified வியாழன், 23 மே 2019 (15:11 IST)
வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆ ராசா நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலைப் பெற்று வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்புக்கட்சிகளான மாநிலக் கட்சிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும் 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில் இப்போது நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ ராசா வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் திமுகவின் முதல் வெற்றியை ஆ ராசா பதிவு செய்துள்ளார். இதில் மேலும் படிக்கவும் :