திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (08:59 IST)

பணியில் போது உயிரிழந்த காவலர்களின் வீர வணக்க தினத்தை முன்னிட்டு காவல் நிலையத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த காவல் துணை கண்காணிப்பாளர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் வீர வணக்க தினத்தை முன்னிட்டு அக்டோபர் 21 காவலர் தினத்தை முன்னிட்டு பல்லடம் காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் எஸ் வி எம் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு காவல் நிலையத்தில் காவலர்களின் பணிகள் என்னென்ன துப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகள் குறித்து நிகழ்ச்சி நடைபெற்றது.
 
மேலும் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மாணவர்களுக்கு காவல் நிலையம் குறித்து காவலர்களின் பணி மற்றும் துப்பாக்கிகளை கையாளும் நெறிமுறைகளை குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுத்தார்.
 
மேலும் இதில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் துப்பாக்கிகளை கையில் பிடித்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர் இதில் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.