1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 16 மார்ச் 2024 (12:03 IST)

ஆளுநருக்கு முடிவு கட்டப்படும்..! அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை..!!

Minister Ragupathi
ஆளுநர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் என்றும் ஆட்சி மாற்றம் வந்தவுடன் ஆளுநருக்கு முடிவு கட்டப்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை என்றும் தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து பதவி ஏற்பு விழா நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
 
பொன்முடி விவகாரத்தில்,  மனிதாபிமானம் பாராமல் பழிவாங்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதுடன், ஆளுநரின் நடவடிக்கையை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

 
ஆளுநர் ரவி,  ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார்  என்று குற்றம் சாட்டிய அமைச்சர் ரகுபதி,  துணைவேந்தர்கள் பதவி கால விவகாரத்தில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதாகவும்,  மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் இதற்கெல்லாம் முடிவு கட்டப்படும் என்றும் கூறினார்.