ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 16 மார்ச் 2024 (11:51 IST)

அதிமுக தேமுதிக இன்று பேச்சுவார்த்தை..! தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படுமா..?

dmdk admk
அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக 3 ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
அந்த வகையில்,  அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த 1-ம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தையும்,  6-ம் தேதி 2-ம் கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.   
 
இந்த பேச்சுவாரத்தையில் தேமுதிகவுக்கு வடசென்னை,  கள்ளக்குறிச்சி உட்பட 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயாராக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் வடசென்னைக்கு பதிலாக வேறு தொகுதியை வழங்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை விடுத்ததாக சொல்லப்படுகிறது.

 
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாத நிலையில் இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதிமுக பேச்சுவார்த்தை குழுவினரை,  தேமுதிக பேச்சுவார்த்தை குழுவினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சந்திக்க உள்ளதாகவும் இன்று தொகுதி உட்பட அனைத்தும் இறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.