1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 13 மே 2021 (20:08 IST)

ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படும்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை அனைத்துக்கட்சி கூட்டத்தில் செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் இந்த கூட்டம் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த நிலையில் பல கட்சிகள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனை வழங்கின
 
இந்த நிலையில் சற்று முன் இந்த கூட்டம் முடிவடைந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் இதுகுறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியபோது, ‘தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அனைத்து கட்சியும் முழு ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை முதல் சென்னையில் அரசின் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது