செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 மே 2021 (19:38 IST)

பிரபல சினிமா தயாரிப்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு !

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் இறந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்த நிலையில் தற்போது,
மற்றோரு பிரபலம் காலமானார்.

சமீபத்தில்இயக்குநர் எஸ்.பி,ஜனநாதன் கொரொனாவால் பலியானார்,  நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, சூர்யா பட இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். இதன்பின்பு நடிகரும், பன்முகக் கலைஞருமான பாண்டு சில தினங்களுக்கு முன்பு காலமானார்.


இந்த அதிர்ச்சியில் இருந்து திரையுலகினர் மீளுவதற்குள்ளாகவே இன்று மற்றொரு நேற்று முன் தினம் நடிகர்  நெல்லை சிவா காலமானார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நாயகனாக நடித்த தாதா 87 படத்தின் தயாரிப்பாளர் கலைச்செல்வன் கொரொனாவால் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

இவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இவர் தாதா 87 படத்தை தனது நண்பர் விஜய்ஸ்ரீ உடன் இணைந்து கலைச்செல்வன் தயாரித்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.