செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2023 (15:33 IST)

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்!- ராமதாஸ்

கோவை அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது; குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் கூறியதாவது:

‘’கோவை அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது; குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்!

கோவை மாவட்டம் வடசித்தூர்  பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள  தந்தை பெரியாரின் மார்பளவு சிலை மீது சிலர் மாட்டுச் சாணத்தைப் பூசி அவமதிப்பு செய்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஏற்படுத்தவும் போராடிய தலைவரின் சிலையை இவ்வாறு அவமதிப்பது கண்டிக்கத்தக்கது.

பொது அமைதியையும்,  சட்டம் - ஒழுங்கையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டுள்ளதா?  என்பது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும்.  இதற்கு காரணமானவர்களையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.