வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2023 (19:27 IST)

நாளை ’மக்களுடன் ஸ்டாலின்’ செயலி தொடக்கம்

makkaludan naan
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 

நேற்று பேரறிஞர் அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டு மக்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

இந்த  நிலையில், நாளை வேலூரில் நடக்கும் மும்பெரும் விழாவில் 'மக்களுடன்  ஸ்டாலின்' என்ற செயலியை  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

முதலமைச்சரின் கள செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளும் வகையில், இந்தச் செயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.