1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Liquor at extra cost Tasmac administration warning

கூடுதல் விலைக்கு மதுபானம் !- டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

Tasmac administration warning
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இதுபற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இதுபற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக ரூ.10 விலை வைத்து விற்கக்கூடாது எனவும் கூடுதலாக விலைக்கு மதுபானம் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் விற்பனையாளர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவர். சம்பந்தப்பட்ட  கடை மேற்பார்வையாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
காவிரி ஆற்று படுகையில் கொட்டகை: வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை