1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The court bought Edappadi white. Eps apologized! Do you know why?

எடப்பாடியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்.! மன்னிப்பு கேட்ட இபிஎஸ்.! எதற்காக தெரியுமா?

Edapadi
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ். தரப்பு மன்னிப்பு கோரியது.
 
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கில், முன்னர் இணை ஒருங்கிணைப்பாளர் என பதில் மனு தாக்கல் செய்த இ.பி.எஸ். பிறகு பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும் என்று எடப்பாடிக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அந்த பதவி தொடர்பான மனு நிலுவையில் உள்ள போது, எப்படி பதவியை கூற முடியும் என நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியதால், தங்களது தவறுக்கு இ.பி.எஸ். தரப்பு மன்னிப்பு கோரியது.

 
திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
About Writer
Senthil Velan
அடுத்த கட்டுரையில்
அதிரடி அறிமுக சலுகையுடன் HMD Crest 5G Series! நோக்கியா மாதிரியே சாதனை படைக்குமா?