வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (14:10 IST)

கரண்ட் கம்பி மேல் ‘தெம்மா தெம்மா’ ரீல்ஸ்! நடவடிக்கை எடுத்த மின்சார வாரியம்!

Instagram Reels
மின்சார கம்பி மேல் ஏறி இன்ஸ்டாக்ராம் ரீல்ஸ் செய்த இளைஞர் மீது மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீப காலமாக இளைஞர்களிடையே ரீல்ஸ் மோகம் அதிகரித்துள்ளது. ரீல்ஸில் அதிக லைக்குகள் பெறுவதற்காக உயரமான இடங்களில், ரயில் தண்டவாளங்களில் ஆபத்தான வகையில் இளைஞர்கள் ரீல்ஸ் செய்வதும், அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

தற்போது உன்னாக்குளம் என்ற பகுதியில் ஒரு இளைஞர் மின்சார கம்பம் மீது ஏறி ‘தெம்மா தெம்மா’ என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த சமயம் அதில் மின்சாரம் பாயததால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.

அதை ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்து மின்சாரவாரியத்திற்கு டேக் செய்துள்ளார். அதை தமிழ்நாடு காவல்துறைக்கு மின்சாரவாரியம் டேக் செய்துள்ளனர். அந்த குறிப்பிட்ட இளைஞர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஆபத்தான ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் சிக்குவது குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

Edit By Prasanth.K