வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2023 (16:09 IST)

ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவு-- சூப்பர் ஸ்டார் நேரில் அஞ்சலி

ரகுநாதாச்சாரியார்
பிரபல பத்திரிகையாளார் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாச்சாரியார் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சாணக்யா என்ற  ஊடகத்தின் சி.இ.ஓவும், பத்திரிக்கையாளருமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ஊவே.,ரகுநாதாசாரியார் (84) வயது மூப்பில் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில்  நேற்றிரவு காலமானார்.

அவரது மறைவுக்கு பிரபல பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று  அவரது இல்லத்திற்கு நேரில் சென்று  அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
rajini

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ''ஊடகவியலாளர் அன்புத்தம்பி ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தையார் ஐயா ரகுநாதாச்சாரியார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து துயரமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் தம்பி ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.