வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (14:29 IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்: தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு!

plus two
பிளஸ் டூ மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்கம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. 
 
நாளை முதல் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பிளஸ் டூ மாணவர்கள் பிற்பகல் 2 மணி முதல் ஹால்டிக்கெட்டுக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறை தேர்வு மற்றும் மார்ச் மாதம் எழுத்து தேர்வு தொடங்க இருப்பதை அறிந்து ஜனவரி 4 முதல் அதாவது நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிளஸ்1 மாணவர்களுக்கு மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே.
 
Edited by Mahendran