திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (20:02 IST)

நடுரோட்டில் தாய் செய்த செயல்....பரபரப்பு சம்பவம்

tuticorn
தூத்துக்குடியில்,  நடுரோட்டில்  தாய் மற்றும்  நண்பர்கள் முன்னிலையில் இளைஞர் காதலியை திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தூத்துக்குடி  மாவட்டம் அண்ணா நகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர், அதேபகுதியில் வசிகும் கார்த்திகா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், இவர்களின் வீட்டார் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பெற்றோரை எதிர்த்து, கார்த்திகா, தன் காதலன் தினேஷை கரம்பிடிக்கும் உறுதியுடன் இருந்துள்ளார்.

எனவே,  பாளையங்கோட்டையில் உள்ள வேம்படி இசக்கியம்மாள் கோவிலில் இன்று, தினேஷின் தயார் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், கார்த்திகாவுக்கு தாலி கட்டி திருமணம் செய்து, தாயாரின் காலில்ப் விழுந்து ஆசி பெற்றனர்.

Edited by Sinoj