1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (18:12 IST)

பிரபல ரவுடி தலைதுண்டித்து கொலை.....போலீஸார் விசாரணை

ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் பிரபல ரவுடி தலைதுண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகேயுள்ளா செங்கமடையில் வசித்து வந்தவர் பாண்டி என்ற முத்துப்பாண்டி. இவர் மீது 3 கொலை வழக்குகளும், பல்வற் கொள்ளை வழக்குகளும் உள்ளன. பிரபல ரவுடிகளின் பட்டியலில் இவர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு தன் வீட்டை விட்டு வெளியில் சென்ற அவர், வீடு திரும்பவில்லை. எனவே அவரது குடும்பத்தினர், பல இடங்களில் முத்துப்பாண்டியை தேடியும் அவர் கிடைக்கவில்லை.


பின்னர் செங்கமடை கிராமத்தில் உள்ள வயற்காட்டில்  ஒரு ஆணின் சடலம் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

உடலை மீட்ட போலீஸார், அந்த சடலம் முத்துப்பாண்டி என்று கண்டறிந்தனர். அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj