1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (13:58 IST)

அதிமுக - பாமக கூட்டணி உறுதியானது...தொகுதி ’டீலும்’ முடிந்தது...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள  40 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் போட்டா போட்டி போட்டு கூட்டணி பேரம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அதிமுக சட்டென முடிவுக்கு வந்து இன்று பாமகவுடன் தன் கூட்டணி டீலிங்கை முடித்துள்ளது. சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற இதுகுறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 பாராளூமன்ற தொகுதியில் பாமக வுக்கு 7 தொகுதிகளும், ராஜ்யசபாவில் 1 சீட்டு, 7பேர் விடுதலை என்ற ஒப்பந்தத்தை முடிவு செய்துள்ளனர்.
 
இந்த உடன்படிக்கையில் பாமகவின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதிமுகவில் தமிழக முதல்வர் எடபாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தொண்டர்கள் ஆகியோர் திரண்டு கூட்டமாகக்ல கலந்துகொண்டனர்.
 
பாமகவுக்கான ஒப்பந்தத்தை பற்றி துணைமுதல்வர் ஓ பன்னீர் செல்வல் வாசித்தார்.இதில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாமவுக்கான 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவை என்னென்ன தொகுதிகல் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாமவுக்கு , ராஜ்யசபாவில் மாநிலங்களவைக்கு 1 சீட் எனவும் உறுதியானது.தமிழகத்தில் 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிப்பதாகவும் இதில் தெரிவிக்கபட்டுள்ளது.
 
மேலும் பாமக வின் 10 கோரிக்கைகளுக்கு அதிமுக குரல் கொடுக்க வேண்டும் எனவும் பாமக தலைவர் ராமதாஸ்  அதிமுகவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.