புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (09:51 IST)

பாமக வை ஏன் திமுக இழுக்கிறது ? – ஒரு பிளாஷ்பேக்…

முதலில் பாமக கூட்டணியை விரும்பாத திமுக இப்போது மனது மாறி பாமகவோடுக் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுபோல அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக அடங்கியக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பாமக அதிமுக கூட்டணியை விட வலுவான திமுக கூட்டணியில் சேரவே முதலில் ஆர்வம் காட்டியது. ஆனால் அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் பாமகவை அணியில் இணைப்பது குறித்து பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்தார். அதற்குக் கூட்டணியில் உள்ள திருமாவளவன் உள்ளிட்ட சிலக் கட்சிகளின் தலைவர்களின் அழுத்தமேக் காரணமாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து திமுக தரப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் வடமாவட்டங்களிலும் தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்டங்களின் சில தொகுதிகளிலும் பாமக வாக்குவங்கி அதிகமாக இருப்பது தெரிந்திருக்கிறது. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்த சில தொகுதிகளில் அதிமுக விற்கு அடுத்த இடத்தில் இரண்டாமிடத்தைப் பாமக பிடித்திருந்தது.  பாமகவின் கை ஓங்கியுள்ள சில தொகுதிகள் காலியாக உள்ளதால் இடைத்தேர்தல் வர இருக்கிறது.

அதனால் விரைவில் வர இருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக அரசைக் கவிழ்க்க பாமகவின் வாக்குகள் உதவியாக இருக்கும் என திமுக நிர்வாகிகள் சிலர் திமுக தலைவர் ஸ்டாலினிடம் புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளனர். அதனால் மனமிறங்கிய திமுக தலைமை பாமக வோடு இறங்கிப் பேச ஆரம்பித்துள்ளது. இதனால் கூட்டணிக்குள் இருந்த விடுதலை சிறுத்தைகள் உள்ள சிலக் கட்சிகள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை திமுக கூட்டணிக்குள் பாமக வரும் பட்சத்தில் விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளியேறும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.

ஆனால் அதிமுக அரசைக் கவிழ்க்க துருப்புச்சீட்டாக இருக்கப்போகும் பாமக வை விட மனதில்லாமல் பேச்சுவார்த்தையை திமுக நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.