1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: வியாழன், 14 மார்ச் 2019 (17:16 IST)

அதெல்லாம் முடியாது, முடியாது... சொன்னது சொன்னதுதான்! தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

மதுரை மாவட்டத்துக்கு மட்டும் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 
மதுரையில் சித்திரை திருவிழா, சித்ரா பௌர்ணமி சமயத்தில் 10 நாட்கள் நடப்பது வழக்கம். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி  ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. அதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 18ம் தேதி தமிழகம் முழுவதும தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நடைபெறும். எனவே தேர்தலை மதுரை மாவட்டத்துக்கு மட்டும் மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரி  மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மதுரை மாவட்ட நிர்வாகம், சித்திரை திருவிழா நிகழ்வை கருத்தில் கொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பினார்கள். மேலும் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா என்றும் தேர்தல் ஆணையத்தை உயர்நீதிமன்ற நீதிமன்றம் கேட்டிருந்தது. இந்நிலையில்  “மதுரை மாவட்டத்தில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது” என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  இதனால் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவை பொறுத்தே தேர்தல் தேதி விவகாரத்தில் விடை கிடைக்கும்.